கஜா புயல்: மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி!

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 11:28 am
gaja-cyclone-central-govt-gives-rs-200-crore-relief-fund

கஜா புயல் நிவாரண பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ள கஜா புயலால் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துடன், தாங்கள் வளர்த்த பயிர்கள், மரங்களையும் இழந்து அவர்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  கஜா' புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் அரசு தரப்பில் இருந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கஜா புயல் பாதிபிறகு நிவாரண உதவியாக ரூ.15,000 கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேரடியாக பிரதமரிடம் சென்று கோரிக்கை வைத்தார். அதில், முதற்கட்டமாக ரூ.1,5000 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த சூழ்நிலையில், மின்சார சீரமைப்புக்காக  முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close