கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன்

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 04:38 pm
thol-thirumavalavan-urged-central-govt-to-announce-gaja-cyclone-as-national-disaster

கஜா புயல் நிவாரணத்திலும் கூட மத்திய அரசு மெத்தனமாகவே இருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்திலும் வழக்கம்போலவே மெத்தனம் காட்டிக்கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து உணர்ந்து மத்திய அரசு வேகம் காட்டவேண்டும்.

தென்னை விவசாயிகளுக்கு வழங்குவதாகச் சொல்லியிருக்கிற நிவாரணத் தொகை போதாது. தென்னைக்கு உண்டான சரியான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close