கஜா புயல்: அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது- தமிழக அரசு

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 10:28 am
gaja-cyclone-tn-health-department-s-new-order

கஜா புயலால் பதிப்படைந்துள்ள தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ள கஜா புயலால் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.  கஜா' புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் அரசு தரப்பில் இருந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உணவுக்கே கையேந்தும் நிலையில் உள்ள இம்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசிடம் புகார் தெரிவித்த்துள்ளதை அடுத்து, தற்போது தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close