7 பேர் விடுதலை: வைகோவின் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 02:31 pm
mk-stalin-supports-vaiko-s-protest-for-releasing-rajiv-murder-case-convicts

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி டிசம்பர் 3ம் தேதி வைகோ நடத்தும் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் வழக்கில் ஆளுநர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க அரசு சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஆளுநர் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. 

ஆனால் அதே நேரத்தில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்து ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இதையடுத்து, ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக் கோரி வருகிற டிச.3ம் தேதி ம.தி.மு.க சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். ம.தி.மு.கவின் இந்த போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு அளிப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close