கஜா புயல்: கிராமப்புறங்களில் 67% மின் சீரமைப்பு! - தமிழக அரசு தகவல்

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 04:34 pm
gaja-cycloe-67-of-electricity-work-finished-in-rural-areas-tn-govt

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு அளித்துள்ள பதில் மனுவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 67% மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக தென்னை, வாழை விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

தமிழக அரசு தாக்கல் செய்த அந்த பதில் மனுவில், "தென்னை மரங்களுக்கான நிவாரண உதவி ரூ.1,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், படகுகளுக்கான நிவாரணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற பகுதிகளில் 92% மற்றும் கிராமப்புறங்களில் 67% மின்விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close