தனிக்கட்சி வேண்டாம்... ரஜினிக்கு ஆர்.எஸ்.எஸ் தூண்டில்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 27 Nov, 2018 07:04 pm
rajini-in-rss-bait

தனிக்கட்சி ஆரம்பிக்காமல் பாஜகவில் நேரடியாக இணைய ரஜினியை சந்தித்து ஆர்.எஸ்.எஸ் தலைவவர்கள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். 
மக்களவை தேர்தலில் இந்த முறை, தமிழகத்தில் நிறைய தொகுதிகளில் வெற்றிகளை குவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தில், இந்த முறை வலுவான கூட்டணி அமைத்து, 20 எம்.பி., தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றிபெற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில், அகில இந்திய நிர்வாகிகள் முகாமை, சென்னையில், டிசம்பர் 4ல் ஆரம்பித்து, 9ம் தேதி வரை நடத்த இருக்கிறார்கள். அப்போது பா.ஜ.,வின் பிரசாரம், எந்தெந்த மாநில கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

அத்துடன் விவசாயம் உட்பட முக்கிய துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்களை இந்த கூட்டத்திற்கு அழைத்து, பேச வைக்க இருக்கிறார்கள். முகாமில் கலந்து கொள்ள, சென்னை வருகிற ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், அப்படியே நடிகர் ரஜினி காந்தை சந்தித்து பேசி, பா.ஜகவில் இணைய அழைப்பு விடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். புதிய கட்சியை தொடங்காமல் நேரடியாக பாஜகவில் ரஜினியை இணைய வலியுறுத்த இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்தே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரஜினி பாஜகவில் இணைகிறாரோ இல்லையோ அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது உறுதி என்கிறார்கள் பாஜக தமிழக தலைவர்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close