மு.க.ஸ்டாலின் பயணித்த தனி விமானம் யாருடையது தெரியுமா..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Nov, 2018 01:23 pm
who-knows-the-individual-plane-traveled-by-mk-stalin

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதிப்பை விமானம் மூலம் பார்வையிட்டார் என விமர்சனம் செய்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் சேலத்தில் நடந்த திருமணத்திற்கு தனி விமானம் மூலம் பயணம் செய்தது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த விவகாரம் ஒருபக்கமிருக்கட்டும். ஸ்டாலின் பயணம் செய்த விமானம் எடப்பாடி பழனிசாமியின் உறவினரது என்பது தான் இப்போதைய ஹாட் டாபிக். இதுவரை தனி விமானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பயணித்தது இல்லை. இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்துக்கு அவரது உதவியாளர் தினேஷ் திருமணத்துக்குப் போன போதுதான் தனி விமானத்தில் போனார். ஸ்டாலின் பயணம் செய்த தனி விமானம் சன் குழுமத்திற்கு சொந்தமானது என தகவல் வெளியானது.

ஆனால், அந்தத் தனி விமானம் சேலத்தைச் சேர்ந்த திரிவேணி குரூப்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. திரிவேணி குரூப்ஸ் நிறுவனத்தின் சகோதரர்களான நிர்வாக இயக்குநர் பிரபாகரன், இணை இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு தூரத்து உறவினர்கள். திருச்செங்கோட்டில் திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனம் 35 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. ஒரிஸா உள்ளிட்ட இடங்களிலும் தொழிற்சாலைகளை வைத்துள்ள இந்த நிறுவனம் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. தாது மணல், நிலக்கரி தொழிலில் இந்த நிறுவனம் கொடி கட்டிப்பறக்கிறது.

                                                                        திரிவேணி குரூப் பிரபாகரன்

திரிவேணி ப்ரூக்ளின் தேயிலை தோட்டம், எம்.சாண்ட் மணல் தயாரிப்பு என பல தொழில்களை நிர்வகித்து வருகிறது. முதல்வரின் பல முதலீடுகளையும் இந்த நிறுவனம்தான் கவனித்து வருகிறது என்று சேலத்தில் பரவலான பேச்சும் உண்டு. எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிப்பதே திரிவேணி நிறுவன உரிமையாளர்களின் தயவால்தான் எனவும் கூறப்படுகிறது. அப்படி இருந்தும் இதுவரை அவர்களின் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி பயணித்ததில்லை. ஆனால், ஸ்டாலின் இப்போது பயணம் செய்திருக்கிறார்.  இந்த நிலையில் இவர்களது தனி விமானத்தில் ஸ்டாலின் பயணம் செய்தது  பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close