கஜா புயல் நிவாரண நிதி; மத்திய அரசு உல்டா... சோதனையில் டெல்டா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Nov, 2018 01:48 pm
gaja-cyclone-relief-fund-central-government-ulta-test-is-delta

கஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் பிரதமர் உடனே நிவாரணத் தொகையை அறிவிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அந்தத் தொகை குறைவதும், கூடுவதும்  வடமாநிலங்களில் நடக்கும் தேர்தல் முடிவை பொறுத்தே அமையும் என்கிறார்கள். 

இம்மாதம் 16-ம் தேதி அதிகாலை வீசிய கஜா புயலானது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து மத்திய ஆய்வுக் குழுவினர் பாதிப்புகளை மதிப்பிட்டு சென்றனர். பாதிப்பு குறித்த இந்த ஆய்வறிக்கையை இம்மாதம் 27ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர். புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய குழுவினர் தாக்கல் செய்தாலும் மத்திய அரசில் உள்ள அனைவரது கவனமும் வடமாநிலங்களில் நடக்கும் தேர்தலில் இருக்கிறது. அறிக்கையை வாங்கி வைத்துக் கொள்வார்கள். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்தால், தமிழகத்துக்கான நிதி குறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவே மத்திய அரசை ஆளும் பாஜகவுக்கு பாதகமாக இருந்தால் தமிழகத்தை வளைக்க நிதியை அள்ளித்தருவார்கள் என பாஜக  வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

ஏனென்றால் தமிழக பாஜக கட்சி தலைவர்களால் கூட இன்னும் தேசிய தலைமையை அணுகி புயலுக்கு சாதகமாக ஒரு பதிலை கூட வாங்க முடியலையாம். அதனால், இப்போதைக்கு வடமாநில தேர்தல் முடிவுகள் தான் கஜா புயல் நிவாரண தொகையை தீர்மானிக்கும் என்கிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close