குடி... கர்ப்பம்... வில்லங்கம்.... தமிழிசையை கதறடிக்கும் பிக்பாஸ் காயத்ரி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Nov, 2018 04:34 pm
what-can-you-do-biggboss-gayatri-who-is-crying-for-tamilisai

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கர்ப்பம், குடி என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். தற்போது 35 வயதாகும் காயத்ரி அரது தந்தை நடன இயக்குநர் ரகுராம் துணையோடு 2002ம் ஆம் ஆண்டு சார்ளி சாப்ளின் படத்தில் கதாயாகியாக நடிக்க வந்தார். ஆறெழு படங்களில் நடித்திருந்தாலும் அவர் நாயகியாக நடித்த படம் அது ஒன்றுதான். பிறகு நடன இயக்குனராக மாறினார்.

அங்கும் ஆட்டம் பலிக்கவில்லை. கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே காயத்ரி தமிழக அளவில் ஹைலைட் ஆனார். அவரது அடாவடி கோபமும், அதிரடி பேச்சும் மக்களிடையே நெகட்டிவ் இமேஜை  உண்டாக்கியது. நெட்டிசன்கள் அவரை வைத்து மீம்களை மீட்டினர்.
அடுத்து சில வாரங்களுக்கு முன் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு இருந்தார். 2006-ல் அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் என்பவரை திருமணம் செய்த காயத்ரி, 2008-ல் விவாகரத்து பெற்று விட்டார். இதனால், கணவன் இல்லாமல் கர்ப்பமா? என கலங்கிப்போயினர் காயத்ரியின் நலம் விரும்பிகள். 

கர்பம் மறைந்த சில வாரங்களுக்குப் பிறகு குடிகாரி விமர்சனம் அவரது குடியை கெடுத்து வருகிறது. காயத்திரி ரகுராம் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்திகள் உலா வந்தன. 
இதனை மறுத்த காயத்திரி ரகுராம், தான் மது அருந்தவில்லை. உடல்நலப் பிரச்னையால் மயங்கியதால் போலீசார் உதவினர். எந்த சோதனைக்கும் தயார் என ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அத்தோடு இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜ.கவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார். அவர் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பதால் இந்தக் குற்றச்சாட்டு அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,‘காயத்திரி ரகுராம் பா.ஜனதாவிலேயே இல்லை’ என்று பதில் அளித்தது காயத்திரி ரகுராமை ஆத்திரப்பட வைத்துள்ளது. இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில் ‘நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ, விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன?

நான் பா.ஜனதாவில் இருப்பது பிரதமர் மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை.
நீங்கள் தமிழக பாஜனதாவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லோரது எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது. தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சனைகளை சந்திப்பதைவிட அதில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். குடித்து விட்டு கார் ஓட்டியதாக சொல்வது பொய். தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயாராக உள்ளேன்’ எனத் தெரிவித்து உள்ளார்.
அடுத்து என்னென்ன வில்லங்கத்தில் சிக்கப்போகிறாரோ காயத்ரி ரகுராம்..! 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close