திமுக வெற்றி பெற பாடுபடுவேன்: வைகோ அதிரடி

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 05:19 am
mdmk-leader-vaiko-talks-about-dmk

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 20 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக  வெற்றி வெற  பாடுபடுவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில்  இல்லை  என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து,  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். 

பின்னர் இந்த சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம்  வைகோ கூறியதாவது: "ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என அறிவித்த பிறகு ஆளுநர் விடுதலை செய்திருக்க வேண்டும் ஆனால் தர்மபுரியில் மாணவர்களைக் கொன்ற 3 பேரை ஜெயலலிதா முயற்சியின் காரணமாக ஆயுள் தண்டனையாக மாற்றினார். 3 மாணவிகளைக் கொன்ற பாவிகளை விடுவிக்கவே இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கவர்னரின் அறிக்கையில் மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்டதில் முன் விரோதம் இல்லை என்று ஆளுநர் அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது யார் எடப்பாடி அரசா அல்ல கவர்னரா இதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். ஆளுநர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு போட்டி அரசாங்கம் நடத்துகிறார். ஆளுனர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அவர் தலைமை நீதிபதி கூறிய தீர்ப்பை மீறி செயல்பட்டுள்ளார்.
 
அருமை நண்பர் துரைமுருகன் கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டார் ஆனால் ஏழு பேர் விடுதலையில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் ஆதரவுக் கடிதம் கொடுத்ததில் விளக்கிவிட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு அதிமுக அரசு கைக்கூலியாக செயல்பட்டுள்ளது என்றும் 
தமிழக அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்திருந்தால் இன்று தீர்ப்பு இப்படி வந்திருக்காது என்றார் மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில்  திமுக 40 தொகுதிகளிலும் 20 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற பாடுபடுவேன்" என்று அவர் கூறியுள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close