அமைச்சர் தங்கமணியின் ரகசிய ஆடியோ... டி.டி.வி.தினகரனின் அடுத்த அதிரடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 29 Nov, 2018 08:10 pm

again-secret-audio-release-t-t-v-dhinakaran-team-plan

ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டார் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல். இதனையே அமமுகவினர் தங்களது அடித்தளமாக பயன்படுத்த தொடங்கி விட்டதால் எடப்பாடி அணி மடியைப் பிடித்து கலங்கித் தவிக்கிறது. 

ஜெயலலிதா சிகிச்சை பெற்ர வீடியோவை தினகரனின் உத்தரவுபடியே அந்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார்.  இதனால் இடைத்தேர்தலிலிம் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். இந்த ஃபார்முலா அமமுகவுக்கு அந்தஸ்தை கொடுக்க, அதுதான் தாரக மந்திரம் என நம்பிய அவர்கள்,  அடுத்த அதிரடியை ஓரிரு மாதங்களுக்கு முன் ’எம்.பி.,க்கு பிறந்த தம்பி பாப்பா’ என ட்ரெய்லரை வெளியிட்டு சில வாரங்களில் 'ஜெயக்குமாருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிந்து என்ற பெண்ணை ஏமாற்றிவிட்டார்' எனக் கூறி, அதுதொடர்பான ஆடியோக்களையும் வெளியிட்டனர். இதற்குப் பின்னால் இருந்தும் வெற்றிகண்டவர் வெற்றிவேலே.

இந்த சம்பவத்தால் சில நாட்கள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார் ஜெயக்குமார். அடுத்ததாக, அமைச்சர் தங்கமணி பற்றிய ஆடியோவையும் வெளியிட இருக்கிறார்கள் அமமுகவினர். அதையும் ஏற்பாடு செய்வது வேல்.. வேல்.. வெற்றிவேல்தான். ஓ.பன்னீர்செல்வம் தன்னை ரகசியமாக சந்தித்ததை டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகக் கூறினார். அப்போது முதல் எடப்பாடி அணியினர் முகம் சிவந்து கிடந்தனர். ஆனாலும், அதனை சமாளித்து இ.பி.எஸிடம் சமாதானமானர் ஓ.பி.எஸ். அப்போதே தினகரனின் அரசியல் நாகரிகம் இதுதானா? என பரவலான விமர்சனம் எழுந்தது.

இப்போது எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர் தங்கமணி பற்றிய ஆடியோவை தினகரன் தரப்பு வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்ததும் கொதித்து கிளம்பியுள்ள அதிமுகவினர், ’’ஒவ்வொருவரைப் பற்றிய தனிப்பட்ட ரகசியங்களை வெளியிடுவது நல்லதல்ல. ’’எங்களைப் பற்றிய பல விஷயங்களை தினகரன் அறிவார். இதோபோல் ஆடியோக்களை சேகரித்து வைத்திருப்பாரோ என பயப்படுகிறோம். அரசியல்வாதிகளுக்கு ரகசியங்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியமானது. அதனை தினகரன் மீறுவதுதான் வேதனையைக் கொடுக்கிறது. இதைப் பற்றி அவருக்கு யார் எடுத்துச் சொல்வார்கள் என்றும் தெரியவில்லை’’ எனக் கண்ணீர் வடிக்கின்றனர்.

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.