எம்பிக் குதிக்கும் தம்பித்துரை... வெம்பி வெடிக்கும் தொகுதி மக்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 29 Nov, 2018 08:20 pm
thambidurai-for-the-tenson-booming-population-people

எம்.பி.,யாக உள்ள தம்பித்துரை அடுத்த தேர்தல் வருவதால் அவரது தொகுதியில் தற்போது தலைகாட்டி வருகிறார். இத்தனை நாட்களாக டெல்லியில் தங்கி விட்டு இப்போது ஏன் இங்கு வருகிறீர்கள் என அவரை போகும் இடமெல்லாம் பொதுமக்கள் வறுத்தெடுத்து வருவதைப் பற்றி நியூஸ்டிஎம் இணையத்தில் பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். 

மக்கள் கேட்ட கேள்விகளால் பதறிப்போனவர், தற்போது தாக்குதல் வருவதற்கு முன்பே உஷராக தன்னிலை விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், கரூரை அடுத்த ஜெகதாபி என்ற கிராமத்தில் மக்களிடம் மனு வாங்க சென்றார். அங்கு சென்ற அவர் மக்களை பேச விடாமல் தானே முதலில் பேச ஆரம்பித்தார். ’’அதாவது, எம்பி வருவதில்லை... எதுவும் செய்வதில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற எம்பிக்களிலேயே நான் தான் டாப். என் தொகுதியில் 40 ஆயிரம் கிராமங்கள் இருக்கிறது. தொகுதியில் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் போய் வருகிறேன். எந்த எம்.பியும் என்னை போல் தொகுதிக்கு செல்வது கிடையாது.

எதுவும் செய்வதும் இல்லை. நான் தான் உங்களை தேடி வருகிறேன்’’ என சோகத்தோடு பேசி இருக்கிறார். அப்போது அருகில் இருந்த நிர்வாகிகள் ’’புதுச்சேரி உள்பட 39 எம்.பி.,க்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதை தம்பித்துரை  மறந்துட்டார் போல. அதான் தன் கட்சி எம்.பி.,க்களையே மட்டம் தட்டி பேசுகிறார். மற்ற கட்சிக்காரர்கள் இவர் பேசுவதை நோட் எடுத்து அதையே பிரசாரம் செய்தால் வரும் தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது? ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசுவாரா? என கழக உடன் பிறப்புகள் கோபத்துடன் விவாதித்து வருகிறார்கள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close