ஓ.பி.எஸை பின் தள்ளிய எடப்பாடி... ஆட்சியில் 10 ஆயிரமாவது நாளை கடந்த அதிமுக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Nov, 2018 01:00 pm
10-thousand-days-in-power-in-the-last-aiadmk

எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவின், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முதலமைச்சராக தொடர்கிற 10 ஆயிரமாவது நாள் ஆட்சி இன்று.

இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் சித்ரகுப்தன், ’பத்தாயிரம் நாள் கடந்து’ என்கிற தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், ’’ அன்னைத் தமிழ் பூமியை அரசாளும் கழகம் இப்போது ஆட்சி அதிகாரத்தில் பத்தாயிரம் நாள் கடந்து... சூரிய வெளிச்சத்தில் மட்டுமே இலைகள் துளிர்க்கும் என்னும் விஞ்ஞான தத்துவத்தை தகர்த்து, சந்திரனாலும் அது சாத்தியமாகும் என்றே நிரூபித்த எங்கள் எம்.ஜி.ராமச்சந்திரன், 3737 நாட்கள் முடி சூடிய மன்னனாக... 

நடமாடும் பல்கலையாம் நாவலரோ 15 நாட்கள். அன்னை ஜானகி 23 நாட்கள்.  மண்ணுள்ள காலம் வரை விண்ணளவு புகழ் விரித்த மகராசி அம்மாவோ 5,239 நாட்கள். கழகத்திற்கு உலகம் தந்த பரதனாம் ஓ.பி.எஸ் 468 நாட்கள். அதைத் தொடர்ந்து இப்போது கடைக்கோடி தொண்டனும் அதிகாரச் செங்கோலை கைய்லேந்தி அகிலம் வியக்கவே அரசாட்சி நடத்தலாம் என்னும் செம்மாந்த புரட்சியின் சீரிய அடையாலமாய் சேலத்து சீமை தந்த எடப்பாடியார் 647 நாட்கள் கடந்து.. இப்படி ஏங்கி நிற்கும் ஏழைகளை தாங்கிடவே இதயக்கனி தொடங்கிய கழகம் அண்ணாவின் திருமுகத்தை கொடியிலும் கொள்கையிலும் சுமந்து அகிலமே அண்ணாந்து பார்க்கும் வண்ணம் விண்ணுயர வெற்றிகளை விழிவிரிய குவிக்கும் கழகம்...’ என அதிமுகவின் பத்தாயிரமாவது  ஆட்சி நாளை புகழ்ந்திருக்கிறார். 

இதனையடுத்து இந்த நாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close