ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டம்?

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 03:15 pm
are-people-protest-against-sterlite-again

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற ஆய்வறிக்கையை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருந்து வருகிறது. 

அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுசூழல் மாசு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மேகாலயா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

கடந்த 26ம் தேதி தருண் அகர்வால் குழுவினர் தங்களது அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றும், ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நேற்று தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தமிழக அமைச்சரவை கூடி, “ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது” என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

ஆலைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கட்டிடம், தீயணைப்பு, தொழிற்சாலை உரிமங்கள் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இதுதொடர்பான போராட்டத்தில் 14 பேர் உயிரிழப்பு, 273 வழக்குகள், 300க்கும் அதிகமானோர் கைதானது, பொதுச்சொத்துகள் நாசம், துறைமுகம் மூடல், இணைய சேவை முடக்கம் போன்ற சட்டம்- ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 133-ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close