சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேருந்து இயக்கம் குறைப்பு?

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 04:22 pm
chennai-transport-workers-protest

சென்னையில் பல்வேறு இடங்களில் மாநகரப் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

கஜா புயல் நிவாரணத்திற்காக தங்களை கேட்காமல் அரசு போக்குவரத்துத்துறை 2 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது. இதனை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பூவிருந்த்தவல்லி, திருவான்மியூர், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால் சென்னையில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம்காத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close