பாடாய் படுத்தும் பணம்

  பாரதி பித்தன்   | Last Modified : 30 Nov, 2018 10:29 pm
kaaduvetti-guru-family-issues

தமிழகத்தில் எப்போதும் மனம் நிறைந்தவர் முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி. அரசியலில் பலர் பின்பற்றும் வகையில் தனிப்பாதை உருவாக்கியவர். இவர் தொகுதிமக்களுடன் கொண்ட தொடர்பு காரணமாக 5 முறை திருவில்லிபுத்துார் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார். இதில் 3 முறை அதிமுக, ஒரு முறை சுயேட்சை வேட்பாளராகவும், மீண்டும் ஒரு முறை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பிலும் தேந்தெடுக்கப்பட்டார்.

இதை விட 1996 தேர்தலில் தமிழகம் முழுவதும் 4 தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்ற நிலையில் சுயேட்சையாக தாமரைக்கனி வெற்றி பெற்றார் என்பது அவர் தன் தொகுதியில் எத்தனை தீவிரமான ஆதரவைப் பெற்றார் என்பதை வெளிப்படுத்தும்.

அதே தாமரைக்கனி கடைசி நேரத்தில் நோய்வாய்ப்பட்டார். அந்த காலகட்டத்தில் அவர் திமுகவில் இடம் பெற்றிருந்தார். அவர் மகன் இன்பத்தமிழன் அதிமுகவில் இடம் பெற்றிருந்தார். அமைச்சர் பதவிகூட வகித்தார். இந்த சூழ்நிலையில் அவர் தனது தந்தையை சென்று பார்க்க கூடவில்லை. இதற்கு காரணம் ஜெயலலிதா மீதுள்ள பயம், பதவி என்று பல காரணங்களை கூறலாம்.

இது போன்ற அரசியல் நிலைப்பாடு இன்றும் தொடர்வது தான் வேதனையான விஷயம். ஆனால் இந்த முறை ஜெயலலிதா இடத்தில் பாமகத் தலைவர் ராமதாஸ் இடம் பெற்றுள்ளார் அவ்வளவுதான் வேறுபாடு.

1989ம் ஆண்டு பாமக தொடங்குவதற்கு முன்னாள் ஊருக்கு ஊர் பல பெயர்களில் வன்னியர் சங்கங்கள் செயல்பட்டன. அவற்றில் பெரும்பாலான சங்கங்கள் ஒன்றிணைந்து கட்சி தொடங்கப்பட்டது. ஆனாலும் வன்னியர் சங்கத்தின் பெயரிலேயே இயங்கியவர் காடு வெட்டி குரு. பாமக நிறுவனர் ராமதாஸ் உறவினர். தற்போது இந்த சங்கத்திற்கு பல கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  கடந்த தேரதல் வரை ராமதாஸ் வலது கரமாக, அவரின் மூத்த மகன் போல செயல்பட்ட குரு. அதன் பின்னர் படிப்படியாக ஓரம் கட்டப்பட்டார். கடந்த ஆண்டு இவருக்கு நுரையீரல் பிரச்னை இருந்தது. அதற்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடார். குடும்பத்தினர் சொத்துக்களை விற்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. பாமக இவரை கண்டு கொள்ளவில்லை என்று நினைத்த குருவின் ஆதரவாளர்கள் பாமகவில் பிரிந்து கட்சி நடத்தும் தமிழக வாழ்வுரிமை இயக்கத்தலைவர் வேல்முருகனை அணுகி உதவி கேட்கின்றனர். அவர் 16–4–2018 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் குருவின் ரத்த சொந்தங்கள், குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்தால் நான் என் சொத்தை விற்று உதவுகிறேன் என அறிக்கைவிடுகிறார்.

அதன் பின்னர் பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி களம் இறங்கி குருவின் மருத்துவத்தை கண்காணிக்கிறார்கள். தேவையான உதவிகளை செய்கிறார்கள். ஆனாலும் கடந்த மே 25ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறக்கிறார்.

இந்நிலையில் கடந்த நவ.2018ம் தேதி குருவின் மகன் கனல் அரசன் தன் தாய் சொர்ணலதா என்ற லதாவை அவரது உறவினர்கள் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டுதர வேண்டும் என்று வீடியோவை பரவவிடுகிறார். இது காடுவெட்டி குருவின் குடும்ப பிரச்னையை வீதிக்கு கொண்டு வருகிறது.

இந்நிலையில் 28–11–2018 அன்று காடுவெட்டி குருவின் மகள் வித்தாம்பிகை தன் அத்தை மகன் மனோஜ் கிரணை கும்பகோணத்தில் திருமணம் செய்து கொண்டார். மறுநாள் அவர்களை காடு வெட்டியில் சிலர் மிரட்டுவதாக புகார் எழுந்தது. அவர்கள் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.  குருவின் மகன் கனல் அரசன் கும்பகோணத்தில் உள்ள தன் மற்றொரு அத்தை மீனாட்சி வீட்டில் தங்கி உள்ளார்.

இந்த திருமணம் குறித்து கூறும் போது; இந்த திருமணம் எங்கள் குடும்ப வழக்கப்படிதான் நடந்தது. என் தந்தை இறந்த 2 மாதத்தில் ராமதாஸ் என் தாயை அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ; எங்களுக்கு எதிராக பேச வைக்கிறார். இத்தனை நாளாக ராமதாசை நம்பினோம் எங்களை அவர் ஏமாற்றி விட்டார். என் தாய் விரைவில் உண்மையை புரிந்து கொண்டு எங்களுடடன் வருவார் என்றார்.

இது குறித்து மனோஜ்கிரண் கூறியதாவது: அன்பமணி ராமதாஸ்அவர் ஒரு மேடையில் 100 நாளில் குருவின் கடனை அடைப்போம் என்று உறுதியளித்தார். ஆனால் இது வரையில் எந்த ஏற்பாடும் செய்ய வில்லை. வன்னியர் அமைப்புகள் ஆதரவு தெரிவிக்கின்றன. என் மாமா குருவின் பெயரில் சுமார் 300 கோடிக்கு சொத்துக்கள் இருக்கிறது( ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பணம் இல்லை என்றது இங்கு நினைவு கூறத்தக்கது.) அந்த .சொத்துகள் குருவின் மனைவி , மகன், மகள் கையெழுத்துப் போட்டால் தான் வன்னியர் சங்கத்தி்ற்கோ, ராமதாஸ் குடும்பத்திற்கோ மாறும். அதற்காதான் விருதாம்பிகையை ராமதாஸ் உறவினருக்கு திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர்’’ என்றார்.

இதே நேரத்தில் காடுவெட்டியில் தன் கணவரின் சமாதிக்கு மாலை அணிவித்து கண்ணீருடன் பேட்டியளித்த குருவின் மனைவி சொர்ணலதா, என் மகளின் விருப்பம் இல்லாமலேயே இந்த திருமணம் நடந்துள்ளது. என்னை மகளுடன் பேசக் கூட அனுமதிமறுக்கிறார்கள், எனக்கு ராமதாஸ், அன்புமணிதான் உதவி செய்கிறார்கள்‘‘ என்றார்.

இந்நிலையில் நேற்று அவர் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசில் மனுக் கொடுத்தார். அதன் பேரில் காடுவெட்டியில் அவரது வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்துவகிறார்கள்.

காடுவெட்டி குருவின் குடும்பம் சொர்ணலதா உறவினர்கள், காடுவெட்டி குருவின் உறவினர்கள் என்று மோதிக்கொள்வதால் பின்னணியில் அரசியல் இருக்கிறது. அதிலும் ராமதாஸ் இருக்கிறார் என்று வெளிப்படையாக தெரியாததால் நம்ப முடிவில்லை. ஆனால் அது உண்மையாக இருப்பின் ராமதாசும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறது. இது பாமகவிற்கு நல்லது அல்ல.

தாமரைக்கனி ஆன்மாதான் ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவர் உறவை நெருங்க விடமால் செய்து விட்டது என்று உங்களுக்கு தோன்றினால் அதற்கு சமூகம் பொறுப்பல்ல.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close