துடிக்கும் எடப்பாடியின் வலதுகரம்... பினாமியால் அலறும் அதிமுக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Nov, 2018 06:28 pm
the-aiadmk-wandering-through-the-phenomenon

சேலம் மாவட்டத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி எனக் கூறப்படும் இளங்கோவனின் செயல்பாடுகளால் ஏற்பட்ட மாற்றத்தினால் கட்சியின் அடிப்படையே கலகலத்துக் கிடக்கிறது.

சேலம் புறநகர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஒப்புதலோடு கட்சி நிர்வாகிகள், அதிரடி மாற்றம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இது சேலம் மாவட்டத்தில் பெரும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது.  எடப்பாடி பழனிசாமியின் வலதுகரம், நிழல், பினாமி, மனசாட்சி எனக் கூறப்படும் இளங்கோவன் கொடுத்த அழுத்தம் தான், இந்த மாற்றத்துக்கு காரணம் என்கிறார்கள். இதில் அதிரடியாக பொறுப்பு பறிக்கப்பட்ட சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணை செயலாளராக இருந்த பெரியசாமி, எடப்பாடியோடு எப்போதும் நேரடித் தொடர்பில் இருப்பவர்.

சேலம் மத்திய மற்றும் மாநில கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த இளங்கோவன்,  புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் பெரியசாமியோ, தனது தாலுகா கூட்டுறவு சங்கத் தலைவர் பதவி தனக்கே வேண்டும் என்று கேட்டுள்ளார். இளங்கோவன் இதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. எடப்பாடியிடம் கேட்டதற்கு இளங்கோவனைப் போய் பார் என்று சொன்னாராம்.

அதன்படி இளங்கோவனை போய் பார்த்திருக்கிறார் பெரியசாமி. ஆனால், இளங்கோவன்  மசியவில்லை. இதனால் பெரியசாமி, தன்னிச்சையாக மனு தாக்கல் செய்தாராம். அப்போது மொத்தமுள்ள 12 பேரில், பெரியசாமியின் மனு மட்டும் தள்ளுபடியானதாம். இதனால் இளங்கோவனுக்கும், பெரியசாமிக்கும் புகைச்சல் பூதாகரமாகி விட்டது. இதன் எதிரொலியாகவே தலைவாசல் வடக்கு ஒன்றியமும், தெற்கு ஒன்றியமும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. மரியாதை இல்லாமல் மனு தாக்கல் செய்த பெரியசாமிக்கு, எம்ஜிஆர் மன்றத்தில் துணைச் செயலாளர் பதவியும், இளங்கோவனுக்கு விசுவாசமாக இருக்கும் ராமசாமிக்கு ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளர் பதவியும் வழங்கி இருக்கிறார்கள்.

ஜெயலலிதா மரணத்திற்கு பின் முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். சிலமாதங்களுக்கு பிறகு சசிகலா முதல்வராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முதல் ஆதவுக் குரல் எழுப்பியது அப்போது அமைச்சராகவும் இப்போதைய முதல்வராகவும் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி எனப்படும் இதே இளங்கோவன்தான். இதனைத் தொடர்ந்து மத்திய கூட்டுறவு சங்க மாநில தலைவர் இளங்கோவன் தலைமையிலுள்ள, சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமியே கடும் அதிர்ச்சியடைந்தார்.

அதே இளங்கோவன் தான் சேலம் மாவட்ட அதிமுகவில் அதிகாரம் செலுத்தி வருகிறார். இதனால், சேலம் அதிமுகவினார் அலறித்துடிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close