மு.க.ஸ்டாலின் தலையீட்டால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Dec, 2018 06:49 am

new-leader-for-tn-congress

ஒருவழியாக தமிழக தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் இடையே நடந்து வந்த கோஷ்டி மோதல் புதிய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் முடிவுக்கு வர இருக்கிறது. 

திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவியேற்றது முதல் அவர், பாஜக விசுவாசி... அதிமுக விசுவாசி.... ஏனென்றால் அங்கிருந்து வந்தவர் என்றெல்லாம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பினர் முண்டு தட்டினர். தனது ஆதரவாளரான குஷ்புவை தமிழக காங்கிரஸ் தலைவராக்க காய் நகர்த்தினார் இளங்கோவன். இரு கோஷ்டிகளும் வெளிப்படையாக விமர்சித்து கொண்டு, மாறி மாறி டெல்லிக்கு படையெடுத்து குற்றம் குறை சொல்லி வருவதையே வழக்கமாக வைத்திருந்தனர். இது டெல்லி தலைமைக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.

ஆனால், இரு தரப்பையும் தவிர்த்து விட்டு வேறு தரப்பினரை தலைமை பொறுப்புக்கு கொண்டுவர திட்டமிட்டு வந்தார் ராகுல் காந்தி. 
முன்னாள் அமைச்சரும் கட்சியின் சீனியருமான ப.சிதம்பரத்தை தமிழக தலைவராக பொறுப்பேற்க ராகும் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு, கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டுமானால், தனது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு பொறுப்பைக் கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைமை அதனை விரும்பவில்லை. இந்நிலையில், தமிழக காங்கிரஸின் கூடுதல் மாநிலப் பொறுப்பாளர் சஞ்சய் தத் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தபோது மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உடன் செல்லவில்லை. திருநாவுக்கரசர் கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று விட்டார். 

அந்தத் தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டாலின், திருநாவுக்கரசருக்கு எதிராகத் தனது அதிருப்தியை சஞ்சய் தத்திடம் நேரடியாகவே வெளிப்படுத்தினாராம்.  “இவரைத் தலைவர் பொறுப்பில் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பதில் நிறைய சிக்கல்கள் வரலாம். எனவே, இவரைத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றச் சொல்லுங்கள். இதை நான் சொன்னதாகவே உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்” என்றாராம் ஸ்டாலின். இதையடுத்து என்ன நடந்ததோ தெரியவில்லை. பீட்டர் அல்போன்ஸ் அவசரமாய் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
திருநாவுக்கரசரை பொறுப்புக்கு கொண்டு வரும்போதே பீட்டர் அல்போன்ஸ் பெயரும் அப்போது அடிபட்டது. ஆனால், அப்போது தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து காங்கிரஸில் அவர் இணைந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. தி.மு.க-வுக்கு நெருக்கமானவர். ரஜினி, பாஜக எதிர்ப்பாளர். மாணவர் பருவம் முதல் காங்கிரஸில் இருப்பவர். மாவட்டத் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர், எம்பி, எம்எல்ஏ போன்ற பதவிகளை வகித்து அனுபவம் மிக்கவர். 

அநேகமாக, திமுகவுடன் தோழமையுடன் இருக்கும் பீட்டர், தமிழக காங்கிரஸ் தலைவராக வந்தாலும் வரலாம் என்கிறது காங்கிரஸ் வட்டாரம். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.