’என் மகன் ஆன்மா சும்மா விடாது...’’ காடுவெட்டி குரு தாயர் பாமகவினருக்கு சாப வீடியோ!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Dec, 2018 11:53 am

kaduvetti-guru-s-mother

பாமக நிறுவனர் ராமதாஸால் பெற்றெடுக்காத மூத்த பிள்ளை என்று அழைக்கப்பட்ட வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, நுரையீரல் திசுப்பை நோய்க்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த மே மாதம் 26ஆம் தேதி காலமானார். குரு மறைந்த மூன்றாவது நாளே அவரது குடும்பத்திற்குள் சலசலப்புகள் ஏற்பட்டன. தைலாபுரம் தோட்டத்துக்கும் காடுவெட்டிக்குமிடையே உரசல் ஏற்பட்டது.

குருவுக்கு அதிக அளவில் கடன் இருப்பதால், குடும்பம் நெருக்கடியில் தவித்துவருகிறது என்றும், அவர் பயன்படுத்திய டெம்போ டிராவ்லர் வேனை விற்கப் போவதாகவும் வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் குருவின் அக்கா வீட்டினர் பதிவிட்டிருந்தனர்.
குரு மனைவி சொர்ணலதா, தனது தாய் வீடான திண்டிவனம் அருகிலுள்ள செட்டிச்சாவடிக்குச் சென்றுவிட்ட நிலையில், குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஊருக்கு வந்த தங்களை பாமக துணைப் பொதுச் செயலாளர் வைத்தி தலைமையிலான ஆட்கள் அடித்து ஊரை விட்டு வெளியேற்றினார்கள் என்று குருவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணியம்மாள்,  பாமக துணைப்பொச்செயலாளருடன் பேசுகையில் ராமதாஸ் குடும்பத்திற்கு சாபம் விடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதில், ’’என்னை அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான் என்புள்ள. என் குடும்பத்தையே அழிச்சவண்டா நீங்கள்லாம்.. அவன் செத்து இவ்வளவு நாளாச்சே.. இவ்வளௌ நாளா எவனாவது வந்து ஒரு வார்த்தை கேட்டிருப்பானா? என் மகன் செத்த அன்னைக்கு பார்த்தேன் இவங்கள. அடுத்து இன்னை வரைக்கும் பார்க்கல. அவன் செத்து வருசம் திரும்புறதுக்குள்ள உங்க குடும்பம் எல்லாம் என்னா பாடுபடப்போகுது பாருங்க. ஒருத்தனும் வாழ்ந்துபுட்டோம்னு நினைக்காதீங்க. என் பிள்ளையத்தான் கொன்னுட்டீங்க. என் பேரப்புள்ளையையும் இழுத்துட்டு போயிருக்கீங்க. வருமானம் கோடிக்கணக்குல பண்றீங்க. எவன் என்ன உதவி பண்ணீங்க. 

எவனாவது கொடுக்குறான் ஆனால் அவனையும் குடுக்காதிங்கன்னு தடுக்குறீங்க. அவன் உசுரோடு இருந்தப்பத்தான் ஒண்ணும் தெரியாதவனா வாழ்த்துட்டான். வருசம் திரும்புறதுக்குள்ள உங்களையெல்லாம் என்ன பண்றான்னு பாருங்க. அவன் உத்தமனா இருந்தான்னா உங்களை சும்மா விடமாட்டான்’ என ஆவர் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

வீடியோ

https://www.facebook.com/muruga.vel.50/videos/1895083483943422/?t=289

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.