பரிதாபத்தில் உடல்நிலை... துடிக்கும் விஜயகாந்த்; தடுக்கும் பிரேமலதா!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Dec, 2018 01:26 pm
patient-in-poverty-waking-up-vijayakanth-prevent-premalatha

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி அறிக்கை இருந்தது. வழக்கமாக விஜயகாந்த் அறிக்கையில் அவரது கையெழுத்து தெளிவாக இருக்கும். ஆனால் பல மாதங்களாகவே பிரிண்ட் செய்யப்பட்ட கையெழுத்துதான் தேமுதிகவின் எல்லா அறிக்கையிலும் வருகிறது.

விஜயகாந்த்தின் உடல் நலம் பற்றி நெருக்கமான நட்பு வட்டாரத்தில் விசாரித்தோம். “கேப்டனுக்கு பேச்சு சரியாக வரலை என்பது எல்லோருக்கும் தெரியும். நான்கு வார்த்தை சேர்ந்தார் போல அவரால் பேச முடிவதில்லை. அதுமட்டுமல்லாமல் இப்போது கையும் அதிகமாக நடுங்க ஆரம்பித்துவிட்டது. எழுதவும் முடியவில்லை. கேப்டனை பொறுத்தவரை இப்போதும் வெளியே போகணும். மக்களைப் பார்க்கணும்னு ரொம்பவும் துடிக்கிறாரு. ஆனால், பிரேமலதா அதற்கு அனுமதிக்கவில்லை.

கஜா புயலுக்கான நிவாரணம் வழங்குவதற்கு கூட, தான் நேரில் வருவதாக கேப்டன் எவ்வளவோ கேட்டாரு. அதற்கு பிரேமலதா சம்மதிக்கவே இல்லை. அவரும், சுதீஷும்தான் டெல்டா மாவட்டங்கள் முதல், கொடைக்கானல் வரை சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். அப்போது பிரேமலதாவிடமும், சுதீஷிடமும் மக்கள் கேப்டன் எப்படி இருக்காரு என்று கேட்க, ‘அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. உங்களை எல்லாம் பார்க்கணும்னு அவருக்கு ஆசைதான். ஆனா உடம்பு குணமானதும் நிச்சயம் வருவாரு’ என்று நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி வருகிறார்கள்.

டிவியைப் பார்த்து தான் எப்படியாவது டெல்டா மக்களை சந்திக்க வேண்டும் என்று கேட்ட விஜயகாந்திடம், ‘ இப்போ நீங்க வெளியே வர்றது உங்க உடம்புக்கு நல்லதில்ல. வெளியில் வந்தால் நீங்க எதாவது பேசுவீங்க. மீடியாக்கள் சும்மா இருக்க மாட்டாங்க. நீங்க பேசுறது புரியாம அப்படி இப்படினு எதாவது தப்பு தப்பா போடுவாங்க. அதனால் நீங்க வராமல் இருக்கிறதுதான் நல்லது..’ என்று சொல்லி தவிர்த்துவிட்டாராம் பிரேமலதா. கேப்டன் எவ்வளவோ கேட்டும் பிரேமலதா அவர் வெளியே வர சம்மதிக்கவே இல்லை. அதில் நியாயமும் இருக்கிறது.

கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு அவரை அழைத்துப் போக வேண்டாம். நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கு என டாக்டர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதனால்தான் பிரேமலதா அவரை அழைச்சுட்டுப் போறதை தவிர்த்துட்டு இருக்காங்க. நண்பர்கள் யாரும் பார்க்க வந்தால் கூட இப்போது பார்க்க அவரை அனுமதிப்பது இல்லை. மறுபடியும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவும் திட்டமிட்டு வராங்க.’ எனக் கூறுகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close