தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 04:48 pm
minister-kadambur-raju-press-meet

தமிழக அரசுடன் திரைத்துறையினரும் இணைந்தால் மட்டுமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவோ அல்லது வெளியாகும் நாள் அன்றோ தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளத்தின் மூலம் வெளியிடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ் ராக்கர்ஸ்ஸின் இந்த செயலை தடுப்பதற்காக திரைத்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் தமிழ் ராக்கர்ஸ் தொடர்ந்து எந்த திரைப்படமாக இருந்தாலும் வெளியாகும் நாளன்றே படத்தை வெளியிட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது. 

2.0  படத்தை எந்த இணையதளமும் வெளியிடக்கூடாது என படம் வெளியிடுவதற்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருந்தும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் இதுகுறித்து பேசுகையில், 'தமிழ் ராக்கர்ஸ்ஸை தமிழக அரசால் மட்டுமே ஒழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அனைவரும் இணைந்து வந்தால் மட்டுமே ஒழிக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close