மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: கி.வீரமணி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 03:05 pm
mk-stalin-must-be-the-next-tn-cm-k-veeramani

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 86வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறுதலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கி.வீரமணியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சியில் நிதி திரட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி உள்ளிட்டவற்றை காத்து நிலைநிறுத்தவேண்டும் என்றால் அதற்கு மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

மேலும், "பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்ததைவிட தற்போது எதிரிகள் மிக ஆபத்தானவர்களாக உள்ளார்கள். தற்காலத்தில் சாதி ஒழிப்பு வீரர்கள் போர்வையிலும், தமிழ்க்காதலர்கள் போர்வையிலும் எதிரிகள் ஆபத்தானவர்களாக உள்ளார்கள். ஆணவக்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு தொடர்ந்து சமூக நீதிக்காக திராவிடர் கழகம் போராடும்" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close