பிரதமரை விமர்சித்த வைகோவுக்கு தமிழிசை பதிலடி!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 05:41 pm
tamilisai-soundararajan-replied-to-vaiko

நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு எனவும் தமிழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார் எனவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியிருந்தார். 

இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரதப் பிரதமர் மோடி அவர்களை நிதானம் இழந்து தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் நரச நடையில் ஒருமையில் விமர்சிக்கும் வைகோ அவர்களை தமிழக பாஜக கண்டிக்கிறது .கள்ளத்தோணி முதல் ஐயோ கொலைப்பழி போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "விதவிதமாக உடை மாற்றி தினம் ஒரு நாடு விமானத்தில் மோடி போதையில் செல்வதாக கூறும் கள்ளத்தோணி கட்டுமரங்களே விதவிதமாக விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்த கட்சி இலங்கைத்தமிழரை கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரசுடன் கூட்டணிக்கு காத்திருக்கும் வைகோ இலங்கை தமிழர் பற்றி இனிமேலும் பேசதகுதியில்லை" என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close