மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுக: வைகோ

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 08:59 am
mekedatu-dam-issue-vaiko-urged-all-parties-to-be-protest-against-central-govt

கர்நாடக மாநில அரசு, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து 2012ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தற்போது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும். 

மேகதாது அணை கட்டினால் மேட்டூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு பகுதி வறண்டுவிடும். அணை கட்டுவதை தடுக்க இதைத்தவிர வேறு வழியில்லை. முன்னதாக அணை கட்ட வெளிப்படையாக அனுமதி அளிக்க மாட்டோம் என கூறிய மத்திய அரசு, தற்போது ரகசியமாக ஒப்புதல் கொடுத்துள்ளது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மேலும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகி உடனடி தீர்வு காண வேண்டும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close