7 பேர் விடுதலை: வைகோ தலைமையில் மாபெரும் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 02:08 pm
vaiko-protest-against-tn-governor-for-releasing-rajiv-murder-case-convicts

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் தாமதம் காட்டுவதை எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம் சாட்டினார். மேலும் திமுக உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. 

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இன்று வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் பலரும் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். ஆளுநர் மாளிகை அருகே உள்ள சென்னை சின்னமலை பகுதியில் கட்சியினர் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த போராட்டத்தில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close