ஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 01:42 pm
tn-govt-complaints-to-hc-court-reg-jactto-geo-protest

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை(டிச.4) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு தடை கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல், 21 மாத நிலுவைத் தொகையை வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆனால் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு தடை கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

இதற்கு பதிலளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் வழக்காக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close