காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 01:25 pm
cauvery-management-board-meeting-tn-govt-opposed-mekedatu-dam

மேகதாது பகுதியில் அணை விவகாரம் தொடர்பாக இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரியில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடுமையாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், காவிரியில் அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடி விவாதித்து வருகிறது. இந்த கூட்டத்தில் காவிரியில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close