இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரானார் டிடிவி

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 12:21 pm
charges-framed-against-ttv-in-two-leaves-bribery-case

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரகனுக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என டிடிவி.தினகரனுக்கு நீதிமன்றம் கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது.அதன்படி தினகரன் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, குற்றச்சதி (120பி), ஆதாரங்களை அழித்தல்(201) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச்சாட்டின் நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறிய பிறகு, தினகரன் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக ஆனார். அப்போது, அதிமுக யாருக்கு சொந்தம் என்பது குறித்தும், இரட்டை இலையை உரிமம் கொண்டாடுவது குறித்தும் போட்டி எழுந்தது. இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தை அணுகினர். அப்போது இடைத்தரகர்கள் மூலமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தினகரன் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அவர் புதிய கட்சியையும் தொடங்கினார். அதேசமயம், மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close