மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்... அடங்கிய விஷால்... கொதிக்கும் எடப்பாடி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Dec, 2018 01:17 pm

intimidated-tamil-rockers-boiling-edappadi-palanisamy

தமிழ் சினிமாவில் புதிய படங்களுக்கு போட்டியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மட்டும் தான். எப்போதெல்லாம் புதிய படங்கள் திரைக்கு வருகிறதோ அப்போதெல்லாம், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக, அந்த படங்களை தங்களது இணையதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.  

ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆன அன்றே இணையத்திலும் வெளியாகிவிட்டது. இது சம்பந்தமாக பேசிய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘ தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து வந்தால் மட்டுமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க முடியும். திருட்டு விசிடியை ஒழிக்க தனிச்சட்டம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கருத்து கூறியிருந்தார். அவரது இந்தப்பேச்சு சர்ச்சைகளை கிளப்பியது. 

இதனைத் தொடர்ந்து கடம்பூர் ராஜுவை தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழக அரசால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்துவிட முடியாது என நீங்கள் சொல்லி இருக்க கூடாது. இந்த விவகாரத்தில் வெளியில் நம்மை தவறாக பேசுகிறார்கள். நம்மிடம் எல்லா சோர்ஸும் இருக்கிறது. அதை வைத்து அந்த இணையத்தை நடத்துபவர்களை பிடிக்க முடியாதா?’ என்று சற்று கோபத்துடன் கேட்டதாக சொல்கிறார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறாராம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.

இந்த இடைவெளியில் ரஜினி நடித்த பேட்ட டத்தின் முதல் பாடலான மரண மாஸ் பாடலை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்ப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்ததற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டதும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இது மேலும் உஷ்ணத்தை கிளப்ப தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை ஒழித்து திரையுலகினரிடையே நற்பெயரை பெற வேண்டும் என்கிற குறிக்கோலோடு களமிறங்க திட்டமிட்டுள்ளது எடப்பாடி அரசு. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற உடன் தமிழ் ரக்கர்ஸை இரண்டே வாரத்தில் ஒழித்தே தீருவேன் என துள்ளிக் குதித்த விஷால். அவர் சொல்லி இப்போது இரண்டு ஆண்டுகளாகி விட்டது. ஆனால் விஷால் அடங்கி விட்டார். தமிழ் ராக்கர்ஸை ஒழித்தே ஆக வேண்டும் என தமிழக அரசு இப்போது துள்ளிக்குதிக்க ஆரம்பித்துள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.