• குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை, காஞ்சிபுரத்தில் சிபிஐ ரெய்டு
  • ஆர்.கே.நகர் தேர்தல் மோசடி; எஃப்.ஐ.ஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எங்கே? - உயர்நீதிமன்றம் கேள்வி
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு
  • மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி!

கதறும் ராமதாஸ்... காடுவெட்டி குரு குடும்பத்தில் நடப்பதென்ன..? வெளியான அதிரடி பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Dec, 2018 01:17 pm

kaduvetti-guru-family-that-kills-ramadas-outcome-action

பாமகவுக்கு எதிராக காடுவெட்டி குரு குடும்பத்தினரை அரசியல் ஆதாரங்களுக்காக பாஜக பின்னிருந்து இயக்குவதாக அக்கட்சியினரிடம் ராமதாஸ் தகவல் பகிர்ந்திருக்கிறார்.  

பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தனது தைலாபுரம் தோட்டத்தில் அவ்வப்போது சந்தித்து வருகிறார் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அந்த வகையில் டிசம்பர் 2ம் தேதி ஐடி விங் அணியினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சமூக தளங்களில் பாமகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று விசாரித்தவர், அது தொடர்பான சில விஷயங்களை விளக்கியிருக்கிறார். அப்போது ஒரு நிர்வாகி, “குரு குடும்பத்தில் நடப்பது தொடர்பாக சமூக தளங்களில் பாமக மீது கடுமையான வெறுப்புப் பிரச்சாரம் முன் வைக்கப்படுகிறது” என்று கூறினார். இதைக் கேட்ட ராமதாஸ் இந்த விஷயத்தின் பின்னணி பற்றி நிர்வாகிகளிடம் விளக்கியிருக்கிறார்.

“குருவை என் மூத்த பையன்னு நான் சொன்னது மட்டுமில்ல, அதுப்படிதான் நடந்துக்கிட்டும் இருக்கேன். ஆனா, குரு குடும்பத்துல சிலரை நமக்கு எதிரா திருப்பிவிட முயற்சி நடக்குது. வர்ற தேர்தல்ல குரு பையனை வெச்சி நமக்கு எதிரா பிரச்சாரம் செய்யவும் ஒரு திட்டம் நடக்குது.
இதெல்லாம் விசாரிச்சா, இதுக்குப் பின்னாடி பாஜகதான் இருக்கு. நம்மகிட்டேர்ந்து இருந்த சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் எல்லாம் பாஜகவுக்குப் போனாங்க. அவங்க தூண்டுதல் பேர்லதான் இது நடக்குது. பாஜகவோட நம்மைக் கூட்டணிக்குக் கூப்பிடறாங்க. அப்படிப் போனா நமக்கு விழற ஓட்டும் விழாது. அதனால நம்ம அங்கே போகப் போறதில்லை. அதுக்காகத்தான் இப்படி சில வேலைகள் செஞ்சு குருங்குற துருப்புச் சீட்டை வெச்சி பாமகவை உடைக்கலாம்னு பாஜக கணக்குப் போடுது.

எனக்குக் கிடைச்ச தகவல்படி குருவோட தங்கை குடும்பத்தினரை ஒரு மத்திய அமைச்சர் நேர்ல பார்த்து சில விஷயங்கள் பேசியிருக்காரு. அதுக்குப் பிறகுதான் நமக்கு எதிராக பிரச்சினைகளைக் கெளப்புறாங்க. இதுமட்டுமில்ல, இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. ஆனா, நம்ம அசரமாட்டோம். பாமகவோட பலத்தைக் காட்டணும். பாஜகவுக்குப் பயப்படக் கூடாது” என்று பேசியிருக்கிறார் ராமதாஸ்.
இதையெல்லாம் நம்மிடம் கூறிய பாமக நிர்வாகிகள், “காடுவெட்டி குரு வன்னியர் சங்கத் தலைவரா இருந்தவர். எல்லா வன்னியர்கள்கிட்டயும் அறிமுகமானவர். அதனால அவர் குடும்பத்தை வெச்சி எங்க கட்சியை அசைச்சுப் பார்க்க நினைக்குது பாஜக. பல முன்னாள் நிர்வாகிகளைப் பதவி ஆசை காட்டி பாஜகவுக்கு இழுத்திருக்காங்க.

சமீபத்துல மந்திரமாலை மாநாடுனு ஏற்பாடு செஞ்சாங்க. வன்னியர்கள் ஓட்டை எல்லாம் கைப்பத்துற மாதிரி ஒரு சீன் போட்டாங்க. ஆனா, அது பெரிய அளவு பலன் கொடுக்கல. அதைக் கூட அய்யா ட்விட்டர்ல கிண்டல் பண்ணாரு, இப்படி பல முயற்சிகள் எடுத்துக்கிட்டிருக்கு பாஜக. அதில் ஒரு திட்டமாகத்தான் குரு குடும்பத்தைத் தூண்டிவிடறதும்” என்கின்றனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.