தன்மானத்தை சீண்டும் திமுக... விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Dec, 2018 05:15 pm

insult-dmk-vijayakanth-s-decision-to-take-action

தேமுதிகவை கூட்டணிக்கு அழைப்பது தன்மானத்தை இழப்பதற்கு சமம் என திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா தெரிவித்து இருப்பதால் பாஜக, அதிமுக இணையும் கூட்டணியில் ஐக்கியமாக விஜயகாந்த் அதிரடியாக திட்டமிட்டுள்ளார். 

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் முனைப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் எந்தக் கூட்டணியும் இன்னும் முழுமை பெறவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கப் போவதாக எதிர்பார்த்த கட்சிகளையும் கதற விட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். இப்போதைய நிலையில் தி.மு.க.,வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே கூட்டணிக் கட்சியாக இடம்பெற்றுள்ளது. காரணம் அவை இரண்டும் தேசிய கட்சிகள். மத்தியில் அமையப்போகும் ஆட்சிக்கு அவர்கள் தயவு அவசியம் தேவை. ம.தி.மு.க, விடுதலைசிறுத்தைகளின் தயவு பல்குத்தக் கூட உதவாது என ஸ்டாலின் நழுவி வருகிறார். ஆக மொத்தத்தில்  மதிமுக, விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இணைந்தாலும் தலா ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க திட்டம் வைத்திருக்கிறது திமுக.

தனித்து விடப்பட்டுள்ள தேமுதிகவின் சாய்ஸாக,  பாஜக, எடப்பாடி பழனிசாமி அணி கூட்டணியுடன் இணைவது. அல்லது தினகரன் கூட்டணியில் இணைவது எனத் திட்டமிட்டுள்ளது. 'திமுக அணிக்குள் தேமுதிக நுழைய வாய்ப்பே இல்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொடுத்த பேட்டி, பிரேமலதாவைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. கூட்டணி பற்றிப் பேசிய ராசா, 'தன்மானத்தை இழந்துவிட்டு தேமுதிக, பாமகவை அழைக்க முடியாது. துரைமுருகன் எதார்த்தமாக வெளிப்படுத்திய வார்த்தைகள் ஊடகங்களாலும், எதிர் முகாம்களில் உள்ளவர்களாலும் ஊதிப்பெரிதாக்கப்பட்டுள்ளன. கொள்கை வழியில் அமைந்துள்ள திமுக, கூட்டணி தொடரும். ஒருவேளை துரைமுருகனுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருக்குமேயானால் அதற்கு திமுக துணைபோகாது' என்றார்.

ஆ.ராசாவின் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் தேமுதிக பொருளாளரான பிரேமலதா. கடந்த தேர்தலின்போது, ‘’கூட்டணிக்காக தேமுதிகவை எதிர்பார்த்து காத்துக் கிடந்தது திமுக. அப்போதெல்லாம் அவர்களது தன்மானம் எங்கே போனது? விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டாரா? என திமுக தலைவர்கள் மட்டுமல்ல. தொண்டர்கள் வரை ஏங்கிக் கிடர்ந்தார்கள். அப்போது எங்கே போனது அவர்களது தன்மானம்?’’ அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிகவின் வலிமையை உணர்த்த வேண்டும். மீண்டும் காலம் திரும்பாமலா போய்விடும்? என புலம்பி இருக்கிறார் பிரேமலதா. தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைமை அலுவலக பொறுப்பாளர்கள் நம்மிடம்,  ’மக்கள் நலக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய திருமாவளவன், திமுக கூட்டணியில் துண்டு போட்டு சீட் பிடிக்க முயன்று வருகிறார்.  அவரைப் பின்தொடர்ந்து வைகோவும் சென்றுவிட்டார். திமுகவோடு எந்தக் காலத்திலும் சேர மாட்டோம் என ரோஷத்தைக் காட்டிய இரண்டு கம்யூனிஸ்டுகளும், ஸ்டாலின் தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் என முழங்கத் தொடங்கி விட்டனர். 

மக்கள் நலக் கூட்டணிக்குள் இறுதியில் வந்த கேப்டனை ஒதுக்கிறார்கள். வரக் கூடிய லோக்சபா தேர்தலில் தினகரனோடு கூட்டணி சேருவதை முதல் சாய்ஸாக வைத்திருக்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலிலேயே உள்ளூர் தேமுதிகவினர் தினகரனுக்காக வேலை பார்த்தனர். மக்களவை தேர்தலில் அவரோடு கூட்டணி வைத்தால், பணம் வரும் என நினைக்கின்றனர். இரண்டாவதாக, மீண்டும் எடப்பாடி தங்களை அழைப்பார் என தலைமை நினைக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்தால் அதில் தேமுதிகவும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனக் கேப்டன் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.

பாஜகவுக்கு எதிராக எந்தவித கடுமையான விமர்சனத்தையும் கேப்டன் முன்வைத்ததில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.