கருணாநிதியை கதற வைத்த விஜயகாந்த்... காத்திருந்து கருவறுத்த திமுக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Dec, 2018 05:37 pm

vijayakanth-wonders-karunanidhi-waiting-for-the-dmk

மக்கள் நலக் கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளை கூட்டணி திமுக பாணியில் கூட்டணி கட்சியாகவோ, அல்லது நட்புறவு கட்சியாகவோ ஏற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். ஆனால் தேமுதிகவை இணைத்துக் கொள்வது ’தன்மானத்திற்கே இழுக்கு’ என ஆ.ராசா கடுமையாக கரித்துக் கொடி இருக்கிறார். தேமுதிக மீது அப்படி என்ன திமுகவுக்கு கோபம்? என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் இணைய பேரம் பேசிக் கொண்டே இறுதியில் மக்கள் நலக் கூட்டணியின் இணைந்து கருணாநிதியை ஏமாற்றினார் விஜயகாந்த். இதில் அதிகம் ஏமாந்தது சபரீசன்தான். அந்தக் கோபத்தை தான் இப்போது ஆ.ராசா மூலமாகத் தீர்த்து இருக்கிறார்.  'கொள்கைரீதியாக ஒத்து வரக் கூடிய கட்சிகளுடன் தோழமையுடன் இருக்கிறோம். எங்கள் கூட்டணியில் அவர்கள் இல்லை' என விசிகவுக்கும் வைகோவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் துரைமுருகன். இந்தப் பேட்டி உருவாக்கிய பாதிப்பை, அடுத்த சில நாள்களில் சரிசெய்துவிட்டார் ஸ்டாலின். இப்போது திருமாவளவனும் வைகோவும் ஸ்டாலினுடன் ராசியாகிவிட்டனர்.  ஆனாலும், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட மருத்துவர் ராமதாஸுக்கும், பிரேமலதாவுக்கும் ஆ.ராசா பதில் கொடுத்திருந்தார். இப்படியொரு ஆவேசமான பதிலை பிரேமலதாவும், எல்.கே. சுதீஷும் எதிர்பார்க்கவில்லை. இதற்கான பின்னணி குறித்து பேசும் திமுகவினர், 'மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தைக் கொண்டு வரும் வேலைகளில் ஆர்வம் காட்டி வந்தார் வைகோ. அதேநேரம், திமுகவில் இருந்து சபரீசன் மூலமாக சுதீஷிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வைட்டமின் ப' தொடர்பான விஷயங்களுக்கு எல்லாம் ஒத்துழைத்த கருணாநிதி, விஜயகாந்த் முன்வைத்த துணை முதல்வர் பதவி, வலுவான ஐந்து துறைகளுக்கு அமைச்சர் பதவி போன்றவற்றால் புருவத்தைச் சுருக்கினார். காங்கிரஸ் கட்சி தயவில் மைனாரிட்டி ஆட்சி நடந்தபோதே கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவிக்காதவர் கருணாநிதி. பழையவற்றிலிருந்து பாடம் கற்ற கருணாநிதி விஜயகாந்தின் கோரிக்கையை வெளிப்படையாக நிராகரிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில், இப்போதைக்கு சம்மதித்து விட்டு, தேர்தல் முடிந்தே பிறகு கல்தா கொடுப்போம் எனவும் முடிவு செய்திருந்தார் கருணாநிதி. 

இதையொட்டி சுதீஷிடம் ஒருபக்கம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஜெயலலிதாவை வீழ்த்த கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது எனக் கருணாநிதியும், விஜயகாந்த்தை வரவேற்கக் காத்திருந்தார். இடையில் சசிகலா கணவர் நடராஜன் தூண்டுதலில் சில தொழிலதிபர்கள் விஜயகாந்தை வளைத்துவிட்டனர்.

எத்தனை கோடிகள் வேண்டும் என்றாலும் தருகிறோம் எனக் கடைசி வரையில் இலவு காத்த கிளியாக தவம் இருந்தார் சபரீசன். ஒருவரை எப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது என்ற வித்தையை பிரேமலதா குடும்பம் காட்டிவிட்டதை சபரீசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல், முதல்வர் வேட்பாளராக நின்று கொண்டு ஸ்டாலினுக்கே சவால்விட்டார் அன்புமணி. இந்த இருவரையும் கருவறுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டுத்தான், ஆ.ராசா என்ற அஸ்திரத்தை ஏவினார் சபரீசன்' என்கின்றனர்.

newstm.in


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.