காவிரி பற்றி பேச தி.மு.கவிற்கு தார்மீக உரிமை கிடையாது: அமைச்சர் காமராஜ்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 01:10 pm
cauvery-mekedatu-issue-minister-kamaraj-press-meet

மேகதாதுவில் தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராமேஸ்வரம், துண்டக் கட்டளை உள்ளிட்ட கிராமங்களில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகா காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது. காவிரி விவகாரத்தில் தி.மு.கவினர் தொடர்ந்த வழக்கை, அவர்களே திரும்ப பெற்றுக் கொண்டனர். எனவே காவிரி உரிமை பற்றி பேசுவதற்கு தி.மு.கவிற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close