ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 02:05 pm
jayalalithaa-death-anniversary-ttv-dinakaran-tributes

ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அண்ணா சிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது.

முன்னாள் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் அ.தி.மு.கவினர் இன்று மாபெரும் பேரணி நடத்தினர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெற்றது. 

இதையடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பிலும் பேரணி நடைபெற்றது. தினகரன் தலைமையில் அமைதி ஊர்வலம் அண்ணா சாலையில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையை அடைந்தது. திறந்த ஜீப்பில் சென்ற தினகரனுடன் அன்பழகன், பழனியப்பன், பி.வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தமிழன் ஆகியோர் சென்றனர்.

அமைதி பேரணி மெரினாவில் நிறைவடைந்ததும், தொண்டர்களுடன் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வரிசையாக சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close