அணி மாறும் வைகோ? சிதறும் கூட்டணி... கதறும் ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 08 Dec, 2018 11:56 am

vaiko-alliance-will-change-m-k-stalin-is-disgust

"தலித்துகளை வைகோ சிறுமைப்படுத்திவிட்டார்" என ஒருபக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் வன்னியரசு குமுற, மறுபக்கம் ”தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மை தான். வன்னியரசு தனது பதிவை நீக்கிவிட்டார். அவரது கருத்துக்கு எதிர்கருத்தாக, தேர்தலுக்கு பணம் அளித்ததை ஏன் வைகோ கூறினார் என்பது புரியவில்லை. அவருக்கு வன்னியரசு மீது கோபமா? என் மீது கோபமா?.. ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால், நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுபவன் நான். யாரையும் தூண்டிவிட்டு விமர்சனம் செய்ய வைக்கும் அற்ப புத்தி எனக்கு கிடையாது” என திருமாவளவன் பாய்ந்திருக்கிறார்.

"இதுபற்றி வன்னியரசு வருத்தம் தெரிவித்துவிட்டார். இதனால் கூட்டணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று இந்த விவகாரத்தை திருமாவளவன்  முடித்து வைத்துவிட்ட நிலையில், ‘திராவிட இயக்கம் தலித்துகளுக்கு செய்தது என்ன? வன்னியரசுக்கு பதில்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு மீண்டும் பிரச்சனையை கிளறிவிட்டிருக்கிறார் வைகோ.

‘ஈழ வாளேந்தி’ என்ற பெயரில் மதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது. இந்த ஈழ வாளேந்தி வைகோதான் என்கிறார்கள். 

இந்த அறிக்கையைப் படித்ததும் ஸ்டாலின் , ‘ஏன் வைகோ இப்படி மீண்டும் மீண்டும் ஒபே விஷயத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்? அவருக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டிருக்கிறார். திருமாவளவனிடமும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். திருச்சியில் வைகோவுடன் ரவிக்குமார் பேசியதையும், அதன்பின் வன்னியரசிடம் தான் கண்டித்ததையும் திருமா விளக்கியிருக்கிறார்.

வன்னியரசு வைகோவுக்கு போன் செய்தபோது அவரது உதவியாளர் தான் எடுத்திருக்கிறார். ஆனால், வைகோ பேசவில்லை. இதனால் அவரிடமே வருத்தம் தெரிவித்து விட்டிருக்கிறார் வன்னியரசு.

இந்த நிலையில் வைகோ மீண்டும் இப்பிரச்னையை கிளப்புவதன் மூலம் கூட்டணிக்குள் ஏதேனும் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறாரோ என்று சந்தேகப்படுகிறாராம் ஸ்டாலின். ஏற்கனவே அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலமாக வைகோவுடன் எடப்பாடி பேசிவருவதாகவும் ஸ்டாலினுக்கு தகவல்கள் கிடைத்த நிலையில் இந்த சந்தேகம் அவருக்கு வலுத்துள்ளது என்கிறார்கள்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.