• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

ஜெயக்குமார் மரபணு சோதனைக்கு தயாரா..? மீண்டும் மிரட்டும் ஆடியோ விவகாரம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 08 Dec, 2018 12:30 pm

jayakumar-is-ready-for-genetic-testing-burning-audio-affair

கடந்த சில மாதங்களுக்கு முன் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் பேசுவது தான் இல்லை என மறுத்தார் அமைச்சர் ஜெயக்குமார். தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல், ‘அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது ஜெயக்குமார்தான். என்னிடம் ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேச மாட்டேன். இதேபோன்ற மேலும் 2 ஆடியோக்கள் என்னிடம் உள்ளது. பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இப்படி வெளிப்படையாகப் பேசுகிறேன்’’ என்று கொதித்தார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெயர் சிந்து என்பதும், சிந்துவின் தாயாரான சாந்திதான், போனில் பேசினார் என்றும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் வடசென்னை, ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தவர்கள் என்ற தகவலும் தெரிந்தது. சில வாரங்கள் கழித்து வழக்கறிஞர் கணேஷ் என்பவரும், வியாசார்பாடியில் சூப் கடை வைத்திருக்கும் சந்தோஷ்குமார் என்பவரும் சிந்து மற்றும் சாந்தி மீது பண மோசடி புகார்கள் கொடுத்தனர். இந்த நிலையில் ஆடியோ விவகாரம் நமுத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம்,  ‘ஜெயக்குமாருக்கும் வெற்றிவேலுக்கும் டீலிங் நடந்துவிட்டது' எனக் கூறினர். 

இதுகுறித்து மீண்டும் இப்போது வாய்திறக்க ஆரம்பித்து இருக்கிறார் வெற்றிவேல். ’’ஜெயக்குமார் ஆடியோ குறித்து பேசக் கூடாது என்றெல்லாம் எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. இந்த விவகாரத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. ஊடகங்களிலும், அரசியல் கட்சிகளும்  பெரிதுபடுத்தாமல் கடந்து சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்டப் பெண் சிந்து, ஆடியோ லீக் ஆவதற்கு 10 மாதத்துக்கு முன்னரே என்னிடம் வந்து, நடந்த பிரச்னைகளை எல்லாம் சொன்னார். அப்போதிலிருந்தே அவருக்கு முறையான தீர்வு வேண்டுமென நினைத்தேன். இது குறித்து பேச ஆளுநரிடம் கூட நான் அப்பாயின்ட்மென்ட் வாங்கினேன். கடைசி நேரத்தில் அந்தப் பெண் தரப்பில் வர மறுத்துவிட்டார்கள்.

இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும். ஊடகங்களிடம் பேசிவிட்டேன். ஆளுநர் வரை இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல முயன்றேன். ஆனாலும், பாதிக்கப்பட்டப் பெண் தரப்பில் சரியான அணுகுமுறை இல்லை. இதற்கு மேல் அவர்கள் தான் காவல் துறையில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிந்து குடும்பம் சென்னையில் இல்லை. பாண்டிச்சேரிக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். ஜெயக்குமாரைப் பார்த்து அந்தப் பெண்ணுக்கு அச்சம். எங்கு தன் குழந்தையைக், ஜெயக்குமார் கொன்று விடுவாரோ அன்று அவர் பயப்படுகிறார். பலர் குடியை கெடுத்தவர் ஜெயக்குமார். என்ன வேண்டுமானாலும் செய்வார். இந்த விவகாரம் தொடர்பாக நானே ஜெயக்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றே ஒரே நோக்கம் தான் எனக்கு உள்ளது. குழந்தைக்கு மரபணு சோதனை செய்தால் எல்லாம் முடிந்துவிடும். ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா..? எனக் கேட்கிறார் வெற்றிவேல்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.