தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் வரமாட்டார்: திருநாவுக்கரசர் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 02:39 pm
congress-thirunavukkarasar-press-meet

தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் கண்டிப்பாக வரமாட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 

இன்று டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என்று தெரிவித்த அவர், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவை மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close