அ.தி.மு.கவுடன் இணையத் தயார்: தங்க தமிழ்ச்செல்வன்

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 03:08 pm
thanga-tamilselvan-press-meet

அ.தி.மு.க.- அ.ம.மு.க கட்சிகளை இணைக்க பா.ஜ.க முயற்சி செய்து வருவது வரவேற்கத்தக்கது தான் என அ.ம.மு.க. கொள்கை பரப்புச்  செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க.- அ.ம.மு.க இணைந்து தான் ஜெயிக்க முடியும் என்ற நோக்கில் இரு கட்சிகளையும் இணைக்க பா.ஜ.க முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்தால் நல்லது தான். அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க ஆகிய இரு கட்சிகளும் வேறல்ல. 

அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். தி.மு.க. தான் எங்களுக்கு எதிரி. முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஆட்சியை அமைத்தால் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார்.

அ.தி.மு.க, தி.மு.க மற்றும் பா.ஜ.க மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை  சசிகலா, டி.டி.வி. தினகரனால் தான் கொடுக்க முடியும். முன்கூட்டியே இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

அ.தி.மு.க. வில் 90 சதவீத தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருந்தி வந்தால் நாங்கள் சேர்த்துக்கொள்வோம்" என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close