புதுக்கோட்டையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைத்த பிறகே சென்னைக்கு திரும்புவேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 02:45 pm
minister-vijayabaskar-press-meet-at-pudukottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் 95% மீட்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது எனவும், அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் கிடைத்துவிட்டது என உறுதி செய்த பிறகு தான் புதுக்கோட்டையில் இருந்து புறப்படுவேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 95% மீட்புப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவம், சுகாதார பணிககளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்பதை உறுதிசெய்த பின்பு தான் சென்னைக்கு புறப்படுவேன். அதுவரை இங்கு தான் இருப்பேன்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close