பட்டியல் இன அமைப்புகள் சேர்வது கற்பனை: இல.கணேசன்

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 12:42 am
ela-ganesan-statement-to-media

தனித்தனியாக இருக்கும் பட்டியலின அமைப்புகள் சேர்வதென்பது கற்பனை என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து நடத்திய பாரதி திருவிழா நேற்று (டிச.10) நடைபெற்றது.  இதில் நிகழ்த்தப்பட்ட பாரதியாரின் வாழ்க்கை நாடகத்தை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், நடிகர் சிவகுமார், மா.பொ.சி. மாதவி ஆகியோர் கண்டு ரசித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன், தனித்தனி பட்டியலின கட்சிகள் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பா.ரஞ்சித் கூற்றுக்கு, அதெல்லாம் ஆசை, கற்பனைகள்.  ஒன்றாக வருவது அரிது. அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேறுபட்டிருக்கிறார்கள். பிரிவுக்குள்ளே ஒற்றுமை ஏற்படுமானால் வரவேற்கிறேன் என்ற கூறினார்.  

அம்பேத்கரை கொண்டாட பாஜவிற்கு உரிமை கிடையாது என்ற பா.ரஞ்சித்தின் கூற்றுக்கு, அம்பேத்கர் வரலாற்றை முழுமையாக படிக்காதவர் தான் இப்படி பேசுவர் என கூறினார்.  மேலும், திருமாவளவன், மதிமுக-விற்கு கூட திமுகவில் இடம் கிடைக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என ஊடகம் சொல்கிறது. ஆனால்,  காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொள்ள எதிர்கட்சிகள் தயாராக இல்லை. அப்படியே சேர்த்து கொண்டாலும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த தயாராக இல்லை. இந்த குழப்பங்கள் நீடிக்கின்றன. பொருத்திருந்து 11 ம் தேதிக்கு பின் பார்ப்போம் என கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close