கணீர் மொழி! - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

  திஷா   | Last Modified : 10 Dec, 2018 02:09 pm
udhayanidhi-wishes-kanimozhi

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது கிடைத்துள்ளது. இதற்கு கட்சியினரும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஒடுக்கப்பட்டோர் குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பதில் கணீர் மொழி! அவருக்கு 2018 -ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அன்புமொழி! வாழ்த்துகள் அத்தை!" எனத் தெரிவித்துள்ளார்.
 

இதற்கு, "அன்பு  உதயாவிற்கு நன்றி!" என கனிமொழி பதிலளித்திருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close