அல்லாடும் அமமுக... ’அவிழ்த்து விடும்’ டி.டி.வி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Dec, 2018 11:58 am
ammk-will-be-unleashed-by-t-t-v-dhinakaran

அமமுகவில் உள்ள செந்தில் பாலாஜி, பழனியப்பன் போன்றோரை திமுக இழுக்க முயற்சிப்பதாக வந்த தகவலை அடுத்து அமமுக வட்டாரம் கலகலத்துப் போயுள்ளது. இதனால், ’அவிழ்த்து விடும்’ திட்டத்தை கையிலெடுத்துள்ளார் டி.டி.வி.தினகரன். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் பதவிகளை இழந்து வருமானமின்றித் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக தினகரன் எதையும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் இனி தனது கட்சி ஆட்களை சமாளிப்பது கஷ்டம் என்கிற நிலைக்கு வந்துட்டாராம். கட்சி உடையாது, ஆனால் கலைய நிறைய வாயப்புகள் இருக்கிறது என்கிறார்கள். பலர் தேர்தலுக்கு முன்பே வேறு கட்சிக்கு மாறினால் சீட் கிடைக்கும், கரன்சி கிடைக்கும் என கணக்கு போடுகிறார்கள்.

கரன்சி இல்லாத காரணத்தால் பலர் கட்சி தாவவும், தாய் கட்சிக்கு திரும்பவும் திட்டமிட்டு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதை கேள்விப்பட்ட சில முக்கிய தலைகள், கரன்சி இருந்தால்தான் கட்சிய கட்டுப்பாட்டோடு வைத்திருக்க முடியும். இல்லாவிட்டால் சிதறு தேங்காய் தான் என டி.டி.வி.தினகரனுக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதற்கு தினகரனோ, ‘’கரன்சி இருந்தும் அதை எடுப்பதில் சிக்கல் இருக்கிறது. நம்மை சுற்றி அமலாக்கத்துறை, ஐடி துறையினர் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். நமக்கு பணம் எங்கேயிருந்து வருகிறது எனக் கண்டுபிடித்துவிட்டால் இருப்பதும் போய்விடும். 

அதனால், எல்லோரையும் தனித்தனியாக அழைத்து பேசி கரன்சி கொடுத்து செட்டில் செய்து விடலாம். யாரும் வெளியே போகாமல் தக்க வைக்கப் பாருங்கள் என்று டி.டி.வி.தினகரன் அமமுக கட்சியில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளிடம் கூறியதாகச் சொல்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் தங்க தமிழ்செல்வனிடம் கூறி அதிமுக- அமமுக இணைத்து வைக்க பாஜக முயற்சித்து வருவதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார் தினகரன். கரன்சியை மட்டுமல்ல, இப்படி ஒரு தகவலையும் அவிழ்த்து விட்டது தங்கள் கட்சியினரை தக்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதி’’ என்கிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close