எ.வ.வேலு கையில் திமுக சீனியர்களின் குடுமி..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Dec, 2018 01:45 pm
dmk-seniors-in-the-hands-of-velu

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு யார் நிழலாக இருப்பது என்பது குறித்து அக்கட்சியின் முக்கியத் தலைகளிடம் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில், எ.வ.வேலுவின் கைகள் ஓங்கி இருப்பதால் அக்கட்சி சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும், அவருடன் நிழல் மாதிரி வலம் வந்தனர். கருணாநிதி மறைவுக்கு பிறகு தலைவராகி இருக்கிற மு.க.ஸ்டாலின் உடன் யார் போவது என பலத்த போட்டியே நடந்து வருவதாகக் கூறுகிறார்கள்.  ''ஸ்டாலினுக்கு சீனியர் என்பதால், துரைமுருகன், அவருக்கு வழிகாட்டியைப் போல ஆகி விட்டார். அதனால், ஸ்டாலினின் நிழல் அந்தஸ்தைப் பிடிக்க, எ.வ.வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, ஜெ.அன்பழகன் என ஒரு, 'குரூப்'பே முட்டி மோதி வருகிறது. இவர்களில் எ.வ.வேலுவின் கையே ஓங்கி இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இது கட்சி சீனியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ’’கட்சியில் ஆரம்ப காலம் தொட்டே இருக்கும் எங்களை ஓரம் கட்டிவிட்டு மாற்று கட்சியில் இருந்து வந்த எ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார்’ எனக் கொதித்து வருகின்றனர். அத்தோடு தங்களது பகுதிகளில் நிர்வாகத்திலும் தலையிட்டு எ.வ.வேலு பலருக்கும் செக் வைத்து வருகிறாராம். ஓ.எம்.ஜி குழு திமுகவின் ஐடி விங்கை கவனித்து வருகிறது. இதனை நிர்வகிப்பது ஸ்டாலின் மகன் சபரீசனாக இருந்தாலும் சம்பளம் கொடுப்பதெல்லாம் ஏ.வ.வேலு தான். இதனால் ஐடி விங்கும் இவர் சொல் படியே நடக்கிறதாம். ஸ்டாலின் வீட்டில் உள்ளவர்களே ஏ.வ.வேலுவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிப்பதைல்லையாம்.

துரைமுருகன் அரசியல் ரீதியாக நிழலாகத் தொடர்ந்தாலும், எ.வ.வேலு அனைத்திலும் மு.க.ஸ்டாலினுக்கு நிழலாக மாறிவிட்டார்’’ என்கிறது அறிவாலய வட்டாரம்.  ஸ்டாலின் என்ன பேசுகிறார், யாரை சந்திக்கிறார், என்ன முடிவெடுக்கிறார் என்ற அனைத்தையும் வேலு முன்னதாகவே தெரிந்து கொள்கிறார்.  ஏறக்குறைய 24 மணி நேரமும் ஸ்டாலினை கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார் வேலு. வேலுவின் கைப்பாவையாகவே ஸ்டாலின் மாறி விட்டார் என்றே கூறலாம்’’ எனக் கொதிக்கிறார்கள் திமுக சீனியர்கள். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close