மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுடன் பேசும் நபர்... சசிகலா தரப்பு அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Dec, 2018 11:29 am
the-person-who-speaks-to-jayalalithaa-after-the-death-sasikala-party-shock

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை பரபரப்பை எட்டியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலாவின் உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டவர்களிடம் மீண்டும் குறுக்கு விராசணை நடத்தாப்படுகிறது. அந்த வகையில் ஜெயலலிதாவிற்கு ஆரம்ப காலம் தொட்டே சிகிச்சை அளித்து வரும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார். போயஸ்கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை சேர்க்கும் வரை சிகிச்சை அளித்தவர் இவர். 

சிவகுமாரிடம் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ’அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு கொரனரி ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்கள். லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவும் இந்த சிகிச்சை அளிக்க உங்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால் அந்த சிகிச்சையை நீங்கள் அவருக்கு அளிக்க முன்வரவில்லை. உங்களையே நம்பி இருந்த ஜெயலலிதாவிற்கு இதுதான் நீங்கள் செய்த கைமாறா? எனக் கேட்டிருக்கிறார்.

பதில் இன்றி தவித்த சிவக்குமார் கண்ணீர் வடித்தபடி,  ‘இப்போ வரைக்கும் அம்மாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்கலாமோ, செய்திருந்தா அம்மாவைக் காப்பாத்தியிருக்கலாமோ என்ற குற்ற உணர்வு மட்டும் என் மனதை அறுத்துக்கிட்டேதான் இருக்கு. செஞ்சிருக்கணும். ஆனால் செய்யலை.’ என்று சொன்னாராம். சிவகுமாரின் இந்த வாக்குமூலம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது சசிகலா தரப்பிற்கு இந்த விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதனால், சசிகலா உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதனையடுத்து, சேலம், மேட்டூர் அணை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் லிங்கன் நேற்று ஆஜராகி, தான் சில சாட்சியங்களை அளிக்க விரும்புவதாகவும், ஜெயலலிதாவுடன் தான் தற்போதும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் ஆணையத்தில் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதிக்கு முன்பு ஜெயலலிதா உங்களிடம் ஏதாவது பேசியிருந்தால் தெரிவிக்கலாம். அதற்கு பிறகு அவர் உங்களிடம் பேசுவதாக கூறுவதை ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்று மறுத்து விட்டார். இன்று ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமியிடம் விசாரணை நடந்து வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close