பாசிச பாஜக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு: தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 09:17 am
stalin-tweet-about-election-result

3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது பாசிச பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடையே காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3  மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், "ராகுல்காந்திக்கும், இந்திய தேசிய காங்கிரஸ்க்கும்  சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்  சிறப்பாக செயல்பட்டதற்காக எனது வாழ்த்துகள். இந்த முடிவு பாசிச பாஜக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. இது பெரும் கூட்டணி அமைவதையும் வலுப்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும் தெலங்கானாவில் வெற்றிப்பெற்றுள்ள டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

முன்னதாக அவர் நேற்று அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் அளித்த பேட்டியில், "இந்த 5மாநில சட்டமன்ற தேர்தல் ஒரு மினி பாராளுமன்ற தேர்தல் போன்றது. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தி.மு.கவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். 

5 மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வெற்றியானது வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியாக வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாகப் பா.ஜ.கவின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி என்பது பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’. வளர்ச்சி இந்தியாவை உருவாக்கப் போகிறேன் என்று சொன்னார். ஆனால் எதுவும் உருவாக்கப்படவில்லை, அதுமட்டுமல்ல காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கப்போகிறேன் என்று சொன்னார். இது மோடியின் ஆணவத்தினுடைய உச்சக்கட்டம்.

அவர் அப்படிச் சொன்ன காரணத்தால் இப்போது நாங்கள் பா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல மாட்டோம். முறையாக வர இருக்கக்கூடிய தேர்தலில் மதவாதம் பிடித்திருக்கக் கூடிய ஆட்சியை ஒழிப்பதற்கு வேற்றுமை இல்லாத, மோதல் இல்லாத, மதவாதம் இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு முயற்சி செய்வோம்" என்றார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close