"ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்' - தமிழிசை கருத்துக்கு ஜெயக்குமார் விளக்கம் !

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 04:17 pm
minister-jayakumar-press-meet

பலவீனமான கட்களுக்குத் தான் கூட்டணி தேவை, அதிமுக போன்ற பலமான கட்சிகளுக்கு கூட்டணி தேவையில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து, நாடாளுமன்றத் தேர்தலை கணிக்க முடியாது. அ.தி.மு.க- அமமுக கூட்டணி என்பது வதந்தி தான். அமமுக உடன் அதிமுக இணையாது. மாறாக அமமுக, திமுக உடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கும்" என்று தெரிவித்தார். 

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர், சென்னை வியாசர்பாடியில் உள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் இன்று அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சமூக நலத்துறை சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது அவர், "முதியோர்களை பாதுகாக்க போதுமான சட்டம் உள்ளது. இருந்தாலும் சமூகத்தில் மன மாற்றம் என்பது மிகவும் அவசியம். பெற்றோரை காப்பதே தமது வாழ்நாள் கடமை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் தான் முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு. அதற்காக சமூக நலத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமும் உள்ளது" என்று பதிலளித்தார். 

5 மாநில தேர்தல்களில் பாஜகவிற்கு வெற்றிகரமான தோல்வி என தமிழிசை கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்' (Operation success, Patient dead) என சொல்லுவார்கள். யார் சொன்னார்களோ அவர்களிடம் தான் அதன் அர்த்தத்தைக் கேட்க வேண்டும்.  2019 நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் அதிமுக தான் ஜெயிக்கும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close