'எங்கிருந்தாலும் வாழ்க' - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 04:09 pm
ttv-dinakaran-press-meet-and-talks-about-senthil-balaji

கட்சியில் இருப்பதும், விலகுவதும் அவரவர் விருப்பம், எங்கிருந்தாலும் வாழ்க என செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது குறித்து அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது அமமுக உறுப்பினருமாக இருந்த செந்தில் பாலாஜி, இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

இந்தநிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "சகோதரர் செந்தில் பாலாஜியை 2006ல் இருந்தே தெரியும். அவர் சில மாதங்களுக்கு முன்னதாக என்னை சந்தித்து, 'சொந்த பிரச்னைகள் உள்ளது. அதை நான் முடித்துவிட்டு வருகிறேன், அதுவரை நான் கட்சியில் ஆக்ட்டிவாக இருக்க மாட்டேன் என்று கூறினார். நானும் சரி என்றேன். 

அதன்பின்னரும் அவர் என்னை சந்தித்து பேசினார். கஜா புயல் நேரத்தில் அவர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப்பொருட்களையும் அனுப்பி வைத்தார். ஆனால் அவர் திமுகவில் இணைவதாக சில தினங்களுக்கு முன்னதாக தான் தகவல் வெளியானது. கட்சியில் இருப்பதும், விலகுவதும் அவரவர் விருப்பம். செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான், யாரையும்  இழுத்து வைக்க முடியாது. சொந்தப்பிரச்சினைகளால் ஒதுங்கி இருப்பதாக கூறியவர் திமுகவில் இணைந்து விட்டார். 

செந்தில் பாலாஜி போனதில் எங்களுக்கு எந்த வருத்தமில்லை. எங்கிருந்தாலும் வாழ்க.

அவர் மீது என்ன வருத்தம் என்றால் கட்சியில் தொண்டர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் அவரிடம் உள்ளன. சுமார் 4,000 பேர் இணைந்த விண்ணப்பங்கள் அவரிடம் உள்ளன.அதை அவர் கொடுத்தனுப்பினால் எனக்கு உபயோகமாக இருக்கும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close