தேர்தல் வெற்றிக்கு பிறகு முதன்முறையாக நாளை சென்னை வருகிறார் ராகுல் !

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 02:16 pm
rahul-gandhi-to-participate-karunanidhi-statue-inauguration-event

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி. 

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் திருவுருவ சிலைத் திறப்பு நிகழ்ச்சி நாளை (டிச.16) சென்னையில் நடக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் இந்த சிலைத் திறக்கப்பட உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் பல மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் நாளை சோனியா காந்தியோடு திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் நாளை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ராகுல் காந்தியும் சோனியாவுடன் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே நாளை தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close