உண்மையான அதிமுகவினர் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள்: ஓ.எஸ்.மணியன்

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 04:57 pm
os-manian-press-meet

உண்மையான அதிமுகவினர் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள் என செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது குறித்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கைத்தறி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ் மணியன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த சீரிய நடவடிக்கையால் கைத்தறி துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று கூறினார். 

தொடர்ந்து, உண்மையான அதிமுகவினர் என்றுமே வேறு கட்சிக்கு செல்ல விரும்பமாட்டார்கள் என்று திமுகவிற்கு சென்றுள்ள செந்தில்பாலாஜி குறித்து விமர்சித்துள்ளார். 

முன்னதாக அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close