திமுக-வுடன் கூட்டணியா?: கமல் பதில்

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 09:01 pm
no-alliance-with-dmk-congress-kamal-haasan

திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கமல் ஹாசன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை கமல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நாளை திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனும், ரஜினி மக்கள் மன்றம் கட்சியின் தலைவர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை திடீரென, கமல் ஹாசன், திமுக - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் சேர இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த தகவலை தனது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், "மக்கள் நீதி மய்யம் @maiamofficial உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே" என எழுதினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close